ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
மேற்கு ஆரணி தெற்கு ஒன்றியம்,தச்சூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில்
விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் மிகவும் தாமதமாகவும், விவசாயிகளின் நெல்லை சரிவர எடை போடுவதில்லை என்றும் விவசாயிகளிடமிருந்து தொடர்ந்து வந்த புகாரின் பேரில் தச்சூர் நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ் இராமச்சந்திரன் எம்எல்ஏ
பின்னர் அங்குள்ள அதிகாரிகளிடம், விவசாயிகள் பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணத்தை சரிபார்த்து துரிதமாக நெல்லை எடை போட்டு அதற்கு உண்டான தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்
