தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா 2–வது அலையைத் தொடர்ந்து கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பும் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு குறித்து ஆராய ஒரு சிறப்பு நிபுணர் குழுவையும் தமிழக அரசு நியமித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கருப்பு பூஞ்சை நோய்க்காக மத்திய அரசிடம் இருந்து இதுவரை 2,470 ஆம்போடெரிசின் பி மருந்து வந்துள்ளது என்றும் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து தேவை அதிகரித்துள்ளதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.