சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா-வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.33 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து 15.60 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா – 57 லட்சத்தை தாண்டியது பாதிப்பு
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 37.26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா-வைரஸ் பரவியவர்களில் 1.33 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 88 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரசின் 2 ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேசமயம் குணமடைவோரின் எண்ணிக்கை உயர்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,20,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,86,94,879 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 3,380 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,44,082 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,67,95,549 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,97,894 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 15,55,248 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 22,78,60,317 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
