மு.க.ஸ்டாலின் கோவை வருகைக்கு எதிர்ப்பு.. இந்திய அளவில் #GoBackStalin ட்விட்டரில் டிரெண்டிங்.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2 வது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது.
இதனால் தினமும் 30 ஆயிரத்துக்கும் மேல் தொற்று பதிவாகி வருகிறது. இதனால் இறப்பு விகிதமும் உயர்ந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி கொரோனா தொற்றுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளை திமுக அரசு தற்போது எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தன் பொறுப்பை உணர்ந்து நடக்கவில்லை அமைச்சர்களும் எம்எல்ஏ க்களும் பதவி கிடைத்து விட்ட போதையில் சுற்றி வருகின்றனர் என குற்றச்சாட்டு வலுத்து வருகிறது
குறிப்பாக கொங்கு மண்டலமான திருப்பூர், கோவை மாவட்டங்களில் தினமும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து பதிவாகிறது.
மற்ற மாவட்டங்களை விட கோவை மாவட்டத்தில் இறப்பு விகிதமும் உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் இன்றி பலர் இறக்கும் நிலை உருவாகியுள்ளது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு கொங்கு மண்டலங்களை புறக்கணித்துள்ளதாக அதிமுக மற்றும் பாஜக பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
எதிர் கட்சித் தலைவராக ஸ்டாலின் இருக்கும் போது கொரோனா வுக்கு விடிவு கிடைக்காவிடில் கோர்ட் க்கு செல்வேன் என்றார்
தற்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின் மிகவும் மெத்தன போக்கை கடைப்பிடிக்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன
இச்சூழலில் தமிழக அரசு அமைச்சர்களை நியமனம் செய்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கண்காணித்து வருகின்றனர்.
நோய் தொற்று பரவாமல் இருக்க அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இருந்தபோதிலும் தொற்று எண்ணிக்கை குறைந்த பாடில்லை.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக சென்றுள்ளார்.
இன்று ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.
ஒட்டு மொத்தமாக கொங்கு மக்களை திமுக அரசு புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
இதனால் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
