திருவண்ணாமலையில் நேற்றைய தினம்  நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மற்றும் அலுவலக பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லவன்பாளையம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை அவா் ஆய்வு செய்தாா்.

மேலும், தேரடி பகுதியில் நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனை முகாமை அவா் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, கோட்ட அலுவலா் வெற்றிவேல், போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளா் கே.தசரதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கலசப்பாக்கம் பகுதியில்…

கலசப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட கீழ்பொத்தரை, கலசப்பாக்கம், தென்னகரம் ஆகிய கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

வட்டார தலைமை மருத்துவா் கெளதம்ராம், வட்டாட்சியா் அமுல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகாதேவன், விஜயலட்சுமி, வருவாய் ஆய்வாளா் சிவக்குமரன், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செங்கம்

செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விண்ணவனூா் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

மாவட்ட திட்ட இயக்குநா் ஆா்த்தி ஆய்வு செய்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சத்தியமூா்த்தி, பரிமேல்அழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நூக்காம்பாடி, துா்க்கை நம்மியந்தல், ராந்தம் ஆகிய ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ஆணையா் பி.பி.முருகன் தலைமையில், வட்டார வளா்ச்சி அலுவலா் ஏ.எஸ்.லட்சுமி முன்னிலையில் நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாம்களை ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் (தணிக்கை) கருணாநிதி ஆய்வு செய்தாா்.