கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை கொடூர தாண்டவமாடி வருகிறது
தமிழக அரசும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த போர்க் கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

முதல் அலையில் அதிமுக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியது

அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சமூக சேவை அமைப்புகள் வீடு வீடாக சென்று அரிசி காய்கறி வகைகள் அடங்கிய தொகுப்பு பைகளை போட்டி போட்டு கொண்டு வழங்கினர்

மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள் மக்களுக்கு சிரமங்களின்றி இருந்தது நோயின் தாக்கம் கட்டுக்குள் இருந்தது

இந்த இரண்டாம் அலையில் மக்களின் நிலையோ மிக பரிதாபம் சமீபத்தில் தேர்தல் முடிந்து திமுக வெற்றி பெற்று  மு. க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்

தன் பங்கிற்கு முதல் தவணையாக இரண்டாயிரம் கொடுத்துவிட்டு ஊரடங்கையும் கடுமையாக்கி மக்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்டார் பிச்சைபோடுபவர்களின் நிலையும் யாரிடம் போய் கேட்பது என்ற நிலையாகிவிட்டது

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா காலத்தில் எடுக்கும் நடவடிக்கைகள் மக்களுக்கு பயன் அளித்தன அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைத்தது அதிமுகவின் செயல்பாடுகள் திமுக மறுபடியும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என நினைக்குமளவிற்கு இருந்தது எடப்பாடி பழனிசாமி செயல்பட்டது போல்  ஜெயலலிதா கூட அந்த அளவுக்கு செயல்பட்டிருப்பாரா என்பது சந்தேகம்தான்

பத்தாண்டுகாலம் பதவியில்  இல்லாமலிருந்து திமுக பதவியேற்றவுடன் மு.க.ஸ்டாலினுக்கு பதவி கண்ணை மறைத்து விட்டதா? மக்களின் நிலை தெரியவில்லையா? என மக்கள் கேட்கின்றனர்

இந்த கட்டுரையை எழுதும் இன்றைய தினம் 23 மே ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தளர்வு  கடைகளில் சமூக இடைவெளியன்றி கூட்டம் அலை மோதுகிறது

எதிர் வரும் வாரம் முழுவதும் முழு ஊரடங்கு இன்றைய தினத்தில் நோய் தொற்று பரவலுக்கு அரசு காரணமாக இருந்து விட்டு வரும் வாரங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது

முன் இருந்தது போல் பகல் 12 மணி வரை ஊரடங்கை தளர்த்தி இருக்கலாமே ஏழை எளியோருக்கு ஓரளவுக்காவது வருமானத்திற்கு வழி கிடைத்திருக்கும்
திமுக ஆட்சியின் அவலநிலை  இவ்வாறிருக்க, மக்களுக்கு நல்லாட்சி வழங்கியதாக பலமுறை கூறி வரும் எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தற்போது எங்கு போனார்  தன் கட்சியினருக்கு இப்படி உத்தரவிடலாமே

” கொரோனா நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்குங்கள் என்றென்றும் நாம் மக்களுடன் இருப்போம் கொரோனா என்பது மனித குலத்திற்க்கே எதிரானது இதில் ஆளும் கட்சி என்ன எதிர் கட்சி என்ன நாம் அனைவரும் கொரோனா வுக்கு எதிராக அணித்திரள்வோம் “

என கூற வேண்டியது தானே

இன்றைய தினத்தில் தோல்வியில் துவண்டால் நாளை எப்படி பொதுமக்கள் உங்களை நம்புவார்கள்

கொரோனா தொற்று எல்லார் தலைக்கும் மேல் தொங்கும் பாறாங்கல்லாக உள்ளது யார் தலையில் எப்போது விழும் என்பது தெரியாது உணர்ந்து செயல்படுங்கள்

– அ.ஷாகுல்அமீது வந்தவாசி