தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்
.
* நாளை ஒருநாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* ஒரு வாரத்திற்கு மளிகை, காய்கறி, பழக்கடைகள் செயல்படாது.
* பெட்ரோல் பங்க்குகள், பால், ஏடிஎம் உள்ளிட்ட சேவைகள் தடையின்றி கிடைக்கும்.
* பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் நடமாடும் வாகனம் மூலம் விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
