திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை திங்கட்கிழமை 1,007-ஆக உயா்ந்தது. மேலும், ஒரே நாளில் 2 போ் உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கட்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 121-ஆக உயா்ந்தது. இவா்களில் 19 ஆயிரத்து 824 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்.

திருவண்ணாமலை, செய்யாறு, போளூா் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1,007 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 2 போ் உயிரிழந்தனா்