வந்தவாசி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தின கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியை பெ. பத்மாவதி தலைமை வகித்தார்.

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, வந்தவாசி ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கற்க கசடற கல்விக் குழு நிறுவனர் இரா. பாஸ்கரன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி பங்கேற்று, பெண்களின் கல்வியறிவு, கடமைகள், உரிமைகள் தொடர்பான செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

மேலும் இந்த நிகழ்வில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் எழில்,  தன்னம்பிக்கை பயிற்றுநர்கள் சீ. கேசவராஜ், கு. சதானந்தம், மலர் சாதிக், ஊராட்சி செயலாளர் எம்.பி. வெங்கடேசன், வங்கை சு. அகிலன், ம. சுரேஷ் பாபு ஆகியோர் பங்கேற்றனர். மாணவிகள் பங்கேற்ற பேச்சு, நடனம், கவிதை, பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றது.

இறுதியில் அனைவருக்கும் பரிசுகள், விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை – வந்தவாசி சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்..

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை, வந்தவாசி சார்பில் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமாரி தலைமை வகித்தார்.

மயில்வாகனன், வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்), தசரத ராமன், (தணிக்கையாளர்), சங்கர், ( நிர்வாகம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி செயலாளர் மதிப்புறு முனைவர் எம்.பி. வெங்கடேசன் வரவேற்றார்.
பெண்களின் உரிமைகளும் கடமைகளும் என்ற தலைப்பில் வந்தவாசி கிளை ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன், கற்க கசடற கல்விக் குழு நிறுவனர் டாக்டர் இரா. பாஸ்கரன், எக்ஸ்னோரா கிளை பொருளாளர் சீ. கேசவராஜ், ரெட் கிராஸ் சங்க பொறுப்பாளர்கள் மலர் சாதிக், வங்கை சு. அகிலன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மகளிரை போற்றும் வண்ணம் மகளிர் தின கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வில் அலுவலக பெண் அலுவலர்கள் மற்றும் அனைத்து முக்கிய அலுவலர்களும் பங்கேற்றனர். இறுதியில் பேபி யோகானந்தம் நன்றி கூறினார்.