காஞ்சீபுரத்தில் இளைஞர் பாசறை ஆலோசனை கூட்டம்
வீடு வீடாக சென்று அண்ணா தி.மு.க.வின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்குகள் சேகரிக்க மாவட்ட கழக செயலாளர் வி சோமசுந்தரம் ஏற்பாடு
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி அருகில் அருகில் மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் ஏற்பாட்டின்பேரில் அண்ணா தி.மு.க. இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநில பாசறை செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வி.பி.பி. பரமசிவம், மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம் பேசியதாவது:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆசியுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழக மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வாரி வழங்கி வருகின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு காலணி, நோட்டு புத்தகம், விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, பஸ் பாஸ், கல்வி உதவித்தொகை, பள்ளி குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், பொங்கல் பரிசாக ரூ.2500, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி என எந்த மாநில முதல்வரும் செய்ய முடியாத சாதனைகளை தமிழக மக்களுக்காக முதல்வரும், துணை முதல்வரும் செய்துள்ளனர்.
அண்ணா தி.மு.க.வினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, வீதி வீதியாக, வீடு வீடாக சென்று அண்ணா தி.மு.க.வின் மகத்தான சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு காஞ்சீபுரம் மாவட்ட இளைஞர்- இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் பேசுகையில்
முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அம்மாவின் வழியில் சிறப்பான ஆட்சியினை நடத்தி மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கின்றனர்.
அம்மாவின் வழியில் தமிழக அரசு எண்ணற்ற சாதனைகளை செய்து இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக திகழ்கிறது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். மீண்டும் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி கோட்டையில் அமருவார். இது உறுதி என்றார்.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் மைதிலிதிருநாவுக்கரசு, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சீ பன்னீர் செல்வம், மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நடிகை பபிதா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், பொருளாளர் வீ.வள்ளிநாயகம், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பூக்கடை ஆர்.டி.சேகர், பெரிய காஞ்சீபுரம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.பாலாஜி, மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் கவிஞர் எஸ்.முருகவேள், காஞ்சீபுரம் ஒன்றிய செயலாளர் தும்பவனம் டி.ஜீவானந்தம், மாணவரணி செயலாளர் எம்.திலக்குமார், வேளாண்மை விற்பனை குழுத்தலைவர் எஸ்.ஜெயராஜ், நகர செயலாளர் என்.பி.ஸ்டாலின்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இந்த கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் செய்திருந்தார்.
