மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்ததற்கும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்

தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

 எடப்பாடி பழனிசாமி

ஒருநாள் பயணமாக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

முன்னதாக இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி பேசியதாவது:-

முதலில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன். பிரதமர் தொடங்கி வைக்கும் திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

பிரதமர்

பிரதமர் நரேந்திரமோடியின் நடவடிக்கையால் இந்தியாவில் கொரோனா தொற்று குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி திட்டம் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திலும் தமிழகத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கொரோனா காலத்தில் தமிழக அரசின் பணிகளை பாராட்டிய பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன். மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்ததற்கும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கோவை

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த உறுதுணையாக இருந்த மத்திய அரசுக்கு நன்றி கூறுகிறோம். கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதற்கான ஆய்வு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

குடிமராமத்து

தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழரின் பொறியியல் பெருமையை உலகுக்கு பறைசாற்றி வருகிறது.

நீர்மேலாண்மையில் மத்திய அரசின் விருது தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி பேசினார்.