திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில்  அனைத்து ஜமாத் கூட்டமைப்பு மற்றும் வெம்பாக்கம் அனைத்து ஜமாத்  கூட்டமைப்பு மற்றும் செய்யார்  வட்டார ஜமாஅத் உலமா சபை இணைந்து நடத்தும் கண்டன ஆர்பாட்டம்

முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய முகமது நபி (ஸல்) அவர்களை  கொச்சைப் படுத்தி பேசிய பாஜக பிரமுகர் கல்யாணராமனை  தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி மாலை 4 மணி அளவில் செய்யார் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் மாலிக் பாட்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
செய்யார் அனைத்து பள்ளிவாசல் முத்தவல்லிகள்  முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு வக்பு வாரியம் முன்னாள் தலைவர் செ. ஹைதர் அலி மற்றும்  செய்யார் கதீப் அல் அமீன் பள்ளிவாசல் மௌலானா மௌலவி ஏ.இம்ரானுல்லா பாக்கவி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக  நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் செய்து உசேன், நகரத் தலைவர் எஸ். பி. அனிப் பாஷா, இளைஞர் அணி துணை அமைப்பாளர் செய்து உஸ்மான், மாவட்ட துணை செயலாளர் அப்துல்லாஹ் ஒன்றிய செயலாளர் இதயத்துல்லா, மாவட்ட துணைத்தலைவர் சௌகத் அலி மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் ஜமாஅத்தார்கள், ஆண்கள், பெண்கள் என சுமார் ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தகவல்: மன்சூர் வந்தவாசி