சென்னையில்  பிப்.27ந் தேதி நடைபெறவுள்ள
இ.யூ.முஸ்லிம் லீக் தேர்தல் பணிக்குழுவினர் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

– இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர்
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
சென்னை
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இன்று (02-02-2021) பிற்பகல் 12.30 மணியளவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின் போது அரசியல் நிலவரம், சட்டமன்ற பொதுத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இன்றைய சட்டமன்றத்தில் ஆளுநர் உரை குறித்து கலந்துரையாடல் கூட்டம்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற பொதுத் தேர்தல் பணிகுழுவினர் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அழைத்ததை ஏற்று மாநாட்டில் பங்கேற்பதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில செயலாளர் கே.எம். நிஜாமுதீன், திமுக துணைப் பொதுச்செயலாளர் க. பொன்முடி, சட்டமன்ற கொறடா சக்கரபாணி, திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.

இச்சந்திப்பிக்கு பிறகு செய்தியாளர்களிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசிய போது குறிப்பிட்டதாவது:-

தமிழகத்தில் இதுவரை நடைபெற்றிராத நிகழ்வாக, மாநிலத்தின் பட்டிதொட்டி யெங்கும் – திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, அவர் இடையறாது தேர்தல் பரப்புரையாற்றி, மக்களின் உள்ளங்களையெல்லாம் ஊடுருவிக் கொண்டிருக்கிறார்.
அவரது இந்த அழகிய போக்கை பாராட்டிவிட்டு வந்திருக்கிறோம். வரக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, ஆட்சியில் அமரும்… தளபதியார் அவர்கள் தமிழக முதல்வர் நாற்காலியில் அமர்வார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்பதை அவரது இந்தத் தொடர் பரப்புரை உணர்த்திக் கொண்டிருக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக ஒவ்வொரு தேர்த லின்போதும் – தேர்தலுக்கு முன்பாக மாநில அளவில் சில லட்சம் பேர் பங்கேற்கும் மாநில அளவிலான மாநாட்டை நடத்துவது வழமை. ஆனால் இம்முறை கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறைய கட்டுப்பாடுகள் உள்ளதால், நிகழும் பிப்ரவரி மாதம் 27ஆம் நாளன்று சென்னை பெரியார் திடலில் குறுகிய அளவிலான ஒரு மாநாட்டை நடத்துவதாக அறிவித்திருக்கிறோம். தேர்தல் பணிக்குழுவினர் மாநாடு என அம்மாநாட்டிற்குப் பெயரும் வைத்திருக்கிறோம்.

தமிழகத்தின் 38 மாவட்டங்களையும் எங்கள் கட்சியின் நிர்வாக வசதிக்காக 52 மாவட்டங்களாக நாங்கள் பிரித்திருக்கிறோம்.
ஒரு மாவட்டத்திலிருந்து குறைந்தபட்சம் 50 பேர் என மொத்தம் 2,500 முதல் 3,000 பேர் வரை பங்கேற்கும் வகையில் இம்மாநாட்டை நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம்.

தேர்தல் பரப்புரை, தேர்தல் பணிகள், தேர்தல் வியூகம், ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேர்தல் பணிக்குழுவினர் தமது பணிகளை எப்படிச் செய்து கொள்வது என்பன குறித்து அறிவுரை வழங்குவதாக இந்த மாநாடு அமையும்.
இம்மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை சிறப்பு விருந் தினராகக் கலந்து கொள்ள அழைத்திருக்கிறோம்.

அவரும் வருவதற்கு இசை வளித்துள்ளார். மாநாட்டு நாளன்று அவர் நிறைவுப் பேருரை யாற்றவுள்ளார்.
அவர் இசை வளித்தமைக்காக அவருக்கு நன்றியும் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறோம்.
கேள்வி:
தொகுதிப் பங்கீடு பற்றி எதுவும் பேசினீர்களா?
பதில்:
கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள், எந்தெந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் என எது குறித்தும் அவர்களுடன் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. பொதுவாகவே தேர்தல் நெருக் கத்தின்போது கூட்டணித் தலைமை பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்கும். அக்குழு கூட்டணிக் கட்சி களை அழைத்துப் பேசும். அப்படி நாங்கள் அழைக்கப் படும்போது எங்கள் எதிர் பார்ப்பை அவர்களிடம் முறைப்படி தெரிவிக்கவுள் ளோம்.
கேள்வி:
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங் கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 14ஆம் நாளன்று சென்னை வருகிறாரே? இந்த வருகையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்:
அவரது வருகையால் எவ்வித மாற்றமும் மக்களிடம் ஏற்பட்டுவிடப் போவதில்லை. அவரது ஆட்சிக்காலத்தில் மக்கள் குரல்கள் எப்படியெல்லாம் நசுக்கப்படுகின்றன, அவர்களது உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்படுகின்றன, அவர்களது உணர்வுகள் எப்படியெல்லாம் அவமதிக்கப்படுகின்றன என்பனவற்றையெல்லாம் நாட்டு மக்கள் அனைவரும் – குறிப்பாக தமிழக மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியிலிருந்துகொண்டு, மத்திய பாஜக அரசின் இந்த மக்கள் விரோதச் செயல் பாடுகளுக்கு சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருக்கிறது என்பதையும் மக்களும், எல்லாக் கட்சிகளும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதன் பிரதிபலிப்பு வரும் தேர்தலில் தெள்ளத்தெளிவாக வெளிப்படப் போவதை இப்போதே நம்மால் உணர முடிகிறது.
காரணம், தமிழகம் ஒரு பண்பாட்டுப் பாரம்பரியமிக்க, மதநல்லிணக்கம் தழைத் தோங்கும் மாநிலம். அதற்கு வேட்டு வைக்கும் வகையில், மக்கள் மனதைப் புண்படுத்தும் விதமாக பாஜகவினர் நாடு முழுக்க பேசியும், எழுதியும் வருகிறார்கள்.

அண்மையில் மேட்டுப்பாளையத்தில் பாஜகவின் கல்யாணராமன் என்கிற ஒருவர் – உலகமே மதிக்கும் உத்தம இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களைக் குறித்து மிகவும் தரக்குறைவாக, நாலாந்தர நடையில், நாக்கூசும்  சொற்களைப் பயன்படுத்திப் பேசி, மக்கள் மனதில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
மத நல்லிணக்கத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் தமிழக மக்களை – இதுபோன்ற நடவடிக்கைகளால் மத ரீதியாக மோதவிட்டுக் குளிர்காய இந்த மதவெறிக்கும்பல் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
வட நாட்டில் வேண்டுமானால் அந்தப் பருப்பு வேகலாம். ஆனால் தமிழகத்தில் அது ஒருபோதும் வேகாது.
பண்பட்ட இந்தத் தமிழகத்தை பாஜகவின் யாராக இருந்தாலும் – அவர் பிரதமராகவே இருந்தாலும் புண்பட்டதாக ஒருபோதும் ஆக்கிவிட முடியாது. இதுவே, மோடி அவர்கள் வருகைக்கும் தமிழக மக்கள் சொல்லும் பதிலாக இருக்கும்.