சசிகலா தலைமையில் அதிமுகவை மீட்டெடுக்கப்போவதை யாராலும் தடுக்க முடியாது என நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் வெளியிட்டப்பட்டுள்ள கட்டுரையில், “எத்தனை தீய சக்திகளோடு சேர்ந்து துரோக கூட்டங்கள் நடத்தினாலும் அவை புஸ்வானம் ஆகிவிடும். சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு 100% வாய்ப்பில்லை என மனசாட்சியை விற்று விட்டு கூறுவதா? பதவி கிடைத்துவிட்டதும் பச்சை சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் துரோகிகளுக்கு நாவடக்கம் வேண்டும். சீண்டுவார் இன்றி கிடந்தவரை சிம்மாசனத்தில் அமரவைத்தவருக்கு காட்டும் விஸ்வாசம் இதுதானா?

சசிகலா தலைமையில் அதிமுகவை மீட்டெடுக்கப்போவதை யாராலும் தடுக்க முடியாது.

உண்ட வீட்டிற்கே ரெண்டகம் செய்பவர்கள் வரலாற்றில் நம்பிக்கை துரோகிகள் என்றே அழைக்கப்படுவர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.