ஆரணி தொகுதிக்குட்பட்ட கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஏகாம்பரநாதர் ஈஸ்வரர் திருக்கோவிலில் திருத்தேர் அமைக்க ஊர் பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் ரூ 9.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய திருத்தேர் வெள்ளோட்டம்


இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் இராமச்சந்திரன் வடம் பிடித்து இழுத்து சிறப்பித்தார்
இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசுகையில்:
நான் சார்ந்திருக்கும் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக பல்வேறு கோவில்களில் திருப்பணிகளுக்கும், திருத்தேர் புனரமைப்பு போற்ற எண்ணற்ற நற்காரியங்களுக்கும் புரட்சித் தலைவி அம்மாவின் அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம்.
அதன் ஒரு அங்கமாக இப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கொளத்தூர் அருள்மிகு ஏகாம்பரநாதர் ஈஸ்வரர் கோயிலில் திருத்தேர் அமைக்க மதிப்பீடு செய்து ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் செய்து திருக்கோயிலுக்காக கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே நேற்று தைப்பூசத்தன்று திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது
இந்நிகழ்வில் நான் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சிறப்பித்தேன்.இவ்வாறு கூறினார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி திருமால்,மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கொளத்தூர் திருமால் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
