திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் அதிமுக வாக்குச்சாவடி குழு அமைப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் 




வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே மோகன் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், செய்யாறு, ஆரணி, வந்தவாசி, கலசபாக்கம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குச்சாவடி குழு அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன், மாவட்ட அவைத் தலைவா் டிகேபி மணி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஜாகீர் உசேன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் இராமச்சந்திரன் பங்கேற்றுப் பேசினாா்.
இந்நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் டி ராஜி ஒன்றிய கழக செயலாளர்கள் எம் மகேந்திரன் சி துரை அருக்காவூர் அரங்கநாதன் நகர கழக செயலாளர்கள் ஜனார்த்தனம் வந்தவாசி ஓட்டல் பாஷா மற்றும் டி வி பச்சையப்பன் எம்கேஏ லோகேஷ்வரன் அர்ச்சுனன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள்,தொண்டர்கள் கூட்டுறவு சங்க நிா்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனா்
