திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருங்களத்தூர் கிராமத்தில் அதிமுக சார்பில் கழக கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் செய்யார் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.



திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் கலந்து கொண்டு அதிமுக கொடியை ஏற்றி வைத்து அங்கு குழுமியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு எவர்சில்வர் தட்டு வேட்டி சேலைகள் வழங்கினார்
பின்னர் 7 கிளைக் கழகங்களுக்கு தலா ரூபாய் 5000 வீதம் 35 ஆயிரம் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே மோகன் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் ஏற்பாட்டில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட,ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
