ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள  அதிமுக தொண்டர்களுக்கு,பொது மக்களுக்கு புத்தாண்டு பொங்கல் தின சிறப்பு பரிசுகளை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் வழங்கினார்

ஆரணி
ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  அதிமுக  நிர்வாகிகளுக்கு, பொதுமக்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் தினத்தையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் இராமச்சந்திரன்  வேட்டி சேலை,ஜாக்கெட் பிட்  டி சர்ட் ஆகியவற்றை வழங்கி வருகிறார்

இன்று  மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மாபாளையம்,குண்ணத்தூர்,கீழ்நகர், புதுப்பாளையம்,அத்திமலைப்பட்டு,காட்டுக்காநல்லூர்,கொங்கராம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் உள்ள மாவட்ட,ஒன்றிய கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோருக்கு புத்தாண்டு பொங்கல் பரிசுகளை அமைச்சர் சேவூர் எஸ் இராமச்சந்திரன் வழங்கினார்

பொங்கல் பரிசுகளைப் பெற்று சென்ற பொதுமக்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும்  தமிழக அரசிற்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்