திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ஹரித்துவாரமங்கலம், தெற்குபட்டம், ஏரிவேளுர், ஆவூர், இனாம்கிளியூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சியில், கலந்துகொண்டு 218 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2 கோடியே 74 இலட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான வங்கிகடனை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் வழங்கினார்

மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா  தலைமை வகித்தார்.

பின்னர் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ், தெரிவித்ததாவது:

பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதன் மூலம் குடும்ப முன்னேற்றமடையும், சமுதாயம் முன்னேற்றமடையும் என்பதனை அறிந்து திட்டங்ளை தந்து மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்திதந்து, பெண்களின் வாழ்வாதாரத்தை காக்கின்ற வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் செயலாற்றி வருகிறார்.
அதனடிப்படையில் கொரோனா தடை உத்தரவால் மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரம் பாதித்திடாத வகையில் சிறப்புக்கடன் திட்டம் ஏற்படுத்தி அதன்மூலம் நபர் ஒருவருக்கு ரூ.5000- வீதம் அதிகபட்சமாக ஒரு குழுவிற்கு ரூ.1.00 இலட்சம் வங்கிகள் மூலம் சிறப்புக்கடன் பெற்று தந்திடும் வகையில் இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் 632 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4 கோடியே 16 லட்சம் வங்கிகடன் வழங்கப்பட்டது. இதுபோன்று எல்லா நிலைகளிலும் அனைவரையும் பாதுகாக்கின்ற திட்டம் தந்து செயலாற்றி வருகிறார்.
அந்தவகையில் ஹரித்துவாரமங்கலம் ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த 40 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 57 லட்சத்து 20 ஆயிரமும், தெற்குப்பட்ம் ஊராட்சி பகுதிகளைச்  சேர்ந்த 32 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 35 இலட்சத்து 15 ஆயிரமும், ஏரிவேளுர்; ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த 45 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 58 லட்சத்து 05 ஆயிரமும், ஆவூர் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 51 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 55 இலட்சத்து 77 ஆயிரமும், இனாம்கிளியூர் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 50 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 68 இலட்சத்து 05 ஆயிரமும் என 218 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கோடியே 2 கோடியே 74 இலட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான வங்கிகடன்கள் வழங்கப்பட்டது என உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ், தெரிவித்தார்

பின்னர் செய்தியாளர்களிடம்  உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ்,  தெரிவித்ததாவது:
மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் நல்ஆசியோடு தமிழகத்தில் சாதாரண மக்களுக்கு உதவுகின்ற அம்மா அவர்களின் வழியில் வழிநடத்தும் ஆட்சியினை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார். உதாரணமாக பல்வேறு இயற்கை இடர் காலத்திலும் மக்கள் நலப்பணிகள் தொடர்ந்து பாதிப்படைந்து விட கூடாது என்பதினை கருத்தில் கொண்டு  தமிழக முதல்வர் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்கள் அனைவராலும் பாராட்டும் விதமாக அமைகிறது.
நிவர் மற்றும் புரெவி புயலினை தொடர்ந்து பொழிந்த கனமழையினால் திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மொத்த நெல் பரப்பு 96191.50 ஹெக்டேர் இதனால் 1,24,357 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, மூத்த விவசாய சங்க பிரதிநிதிகளாலும், விவசாயிகளாலும் பாராட்டக்கூடிய அளவில் 1 ஹெக்டேருக்கு ரூ.13500 என்றிருந்த விதியினை தளர்த்தி 1 ஹெக்டேருக்கு ரூ.20000 ஆக உயர்த்தி வழங்கியுள்ளார். வேளாண்மைதுறை சார்ந்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ. 192 கோடியே 38 இலட்சத்து 30 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படவுள்ளது. மேலும் தோட்டக்கலை சார்ந்து பாதிக்கப்பட்ட 54.20 ஹெக்டேர் பரப்பு ஆகும் இதனால் 145 விவசாயிகளுக்கு பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கும் அரசின் நிவாரணமாக ரூ.10 லட்சத்து 84 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.  திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் சார்பில் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். தேவையான காலங்களில் தேவையான உதவியினை தமிழக முதல்வர் அவர்கள் வழங்கி வருகிறார் என உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கூறினார்
இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஆசைமணி, திருவாரூர் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவர்; டாக்டர்.கே.கோபால், வலங்கைமான் ஒன்றியக்குழு தலைவர் கே.சங்கர், நீடாமங்கலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு வங்கித்தலைவர் இளவரசன் உள்ளிட்டோர்