காஞ்சீபுரத்தில் பழைய ரெயில்வே ரோட்டில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜாஜி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. மிகப்பழமையான இம்மார்க்கெட் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வையாவூரில் உள்ள மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. மழை பெய்ததால் சேரும் சகதியுமாக காய்கறி வியாபாரம் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நசரத்பேட்டையில் அமைந்துள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்துக்கு மார்க்கெட் மாற்றப்பட்டது.

காஞ்சீபுரத்தில் இருந்து 7 கி.மீ தூரத்தில் காய்கறி சந்தை இருந்ததால், பொதுமக்களும் காய்கறி வாங்க செல்லவில்லை. விற்பனையும் பாதித்தது. இதனால் காய்கறி மார்க்கெட்டை மீண்டும் அதே இடத்தில் செயல்பட அனுமதிக்குமாறு காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா மாவட்ட கழக செயலாளர் வி சோமசுந்தரம் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்.

இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று முதல் ராஜாஜி மார்க்கெட் பழைய இடத்திலேயே செயல்படலாம் என அனுமதி வழங்கினார். இதனால் காய்கறி சந்தை மீண்டும் பழைய இடத்திலேயே செயல்பட தொடங்கியது.

மார்க்கெட் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வாழை மர தோரணங்கள் கட்டப்பட் டிருந்தது. காஞ்சீபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் கலந்து கொண்டு பழமை வாய்ந்த ராஜாஜி மார்க்கெட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மார்க்கெட் திறக்கப்பட்டதையொட்டி மேள தாளங்கள் முழங்க வியாபாரிகள் பட்டாசு வெடித்தும் மங்கள நாதஸ்வரம் இசை நிகழ்ச்சி நடத்தியும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள்.

சங்க வளாகத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் மூலவர், மார்க்கெட் திறப்பு விழாவை முன்னிட்டு தங்க கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தொடர்ந்து மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம் காய்கறி விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலிதிருநாவுக்கரசு, முன்னாள் எம்.பி காஞ்சீ பன்னீர் செல்வம், மாநில டான்சில்க் தலைவர் பூக்கடை ஆர்.டி.சேகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் வீ.வள்ளிநாயகம், ஒன்றிய கழக செயலாளர் தும்பவனம் டி.ஜீவானந்தம், பெரிய காஞ்சீபுரம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.பாலாஜி, மாவட்ட பாசறை நிர்வாகி திலக்குமார்,உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மார்க்கெட் நுழைவு வாயிலில் வெப்பபரிசோதனை செய்யப்பட்டும் மற்றும் கிருமி நாசினி வழங்கப்பட்டும் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டதை யொட்டி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்களும் தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா, மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.