தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 17 லட்சத்து 27 ஆயிரத்து 956 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது
*நாடு முழுவதிலும் உள்ள உயர்நீதிமன்றங்களில் இம்மாதம் 16ஆம் தேதி வரை (16/09/2020) மொத்தம் 51 லட்சத்து 52 ஆயிரத்து 921 வழக்குகள் நிலுவையில் உள்ளன
*இதில் சிவில் வழக்குகள் 36 லட்சத்து 77 ஆயிரத்து 89 மற்றும் கிரிமினல் வழக்குகள் 14 லட்சத்து 75 ஆயிரத்து 832
*சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 லட்சத்து 70 ஆயிரத்து 282 வழக்குகள் நிலுவையில் உள்ளன
*இதில் 5 லட்சத்து 11 ஆயிரத்து 362 சிவில் வழக்குகள் மற்றும் 51 ஆயிரத்து 136 கிரிமினல் வழக்குகள் அடங்கும்
*இதேபோல நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் கீழ் நீதிமன்றங்களில் இம்மாதம் 16ஆம் தேதி வரை (16/09/2020) 3 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரத்து 68 வழக்குகள் நிலுவையில் உள்ளன
*இதில் 94 லட்சத்து 49 ஆயிரத்து 268 சிவில் வழக்குகள் மற்றும் 2 கோடியே 50 லட்சத்து 23 ஆயிரத்து 800 கிரிமினல் வழக்குகள் அடங்கும்
*தமிழகத்தில் உள்ள மாவட்ட மற்றும் கீழ் நீதிமன்றங்களில் 11 லட்சத்து 57 ஆயிரத்து 674 வழக்குகள் நிலுவையில் உள்ளன
*இதில் 6 லட்சத்து 53 ஆயிரத்து 793 வழக்குகள் சிவில் வழக்குகள் ஆகும் மேலும் ஐந்து இலட்சத்து 3881 வழக்குகள் கிரிமினல் வழக்குகள் ஆகும்
மத்திய சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் தகவல்
