காஞ்சிபுரம் கோனேரிகுப்பம் பகுதியில் அதிமுக சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நிவாரண உதவி பொருட்கள் மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் கணேசன்,கழக அமைப்புச் செயலாளர் சோமசுந்தரம் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் காஞ்சிபுரம் ஒன்றியம் சார்பில் செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் ஏற்பாட்டில் கோனேரிகுப்பம் பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மேற்கு மாவட்ட கழக செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன், கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் ஆகியோர் வழங்கினார்கள் உடன் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், புரட்சி தலைவி அம்மா பேரவை மேற்கு மாவட்ட செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மேற்கு மாவட்ட பாசறை துணைத்தலைவர் திலக் மற்றும் பலர்
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் காஞ்சிபுரம் ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் ஏற்பாட்டில் சிறுகாவேரிப்பாக்கம்,ஜெ.ஜெ.நகர்,வினாயகபுரம் உள்ளிட்ட பகுதியில் 3500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மேற்கு மாவட்ட கழக செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன், கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் ஆகியோர் வழங்கினார்கள் உடன் புரட்சி தலைவி அம்மா பேரவை மேற்கு மாவட்ட செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
