அதிதீவிரமாகப் பரவும் கொரோனா : சென்னையில் 1,254.. பிற மாவட்டங்களில் 1,078.. கைவிரித்த அரசு!

கொரோனாவால் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் இரண்டாயிரத்து 396 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸுக்கு இன்றும் தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்திலேயே உள்ளவர்களில் 2,332 பேர், வெளிமாநில மற்றும் நாடுகளில் இருந்து வந்தவர்கள் 64 பேர் என 2,396 பேருக்கு நேற்று தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னையில் நேற்றும் ஆயிரத்து 254 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 39 ஆயிரத்து 641 ஆக அதிகரித்துள்ளது. அதற்கடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 180 பேருக்கும் திருவள்ளூரில் 131 பேருக்கும், திருவண்ணாமலையில் 125 பேருக்கும் நேற்று அதிகபட்சமாக தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அதிதீவிரமாகப் பரவும் கொரோனா : சென்னையில் 1,254.. பிற மாவட்டங்களில் 1,078.. கைவிரித்த அரசு! #CoronaUpdates

சென்னையைப் போன்று தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று  தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 1,078 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் முதல் முறையாக இன்று 32 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுவரை 8 லட்சத்து 21 ஆயிரத்து 594 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 56 ஆயிரத்து 845 பேர் இதுவரையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 31 ஆயிரத்து 316 பேர் குணமடைந்திருப்பதாகவும், இன்று மட்டுமே ஆயிரத்து 45 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

அதிதீவிரமாகப் பரவும் கொரோனா : சென்னையில் 1,254.. பிற மாவட்டங்களில் 1,078.. கைவிரித்த அரசு! #CoronaUpdates

ஆகவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் தற்போது 24 ஆயிரத்து 822 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாள்தோறும் தமிழகத்தில் கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று மேலும் 38 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 704 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டுமே இதுவரை 559 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள். சென்னையில் நேற்று மட்டுமே 30 பேர் பலியாகியுள்ளனர்.