வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் ஸ்ரீ அபேதானந்தா சுவாமிகளின் 27-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதையொட்டி, கல்லூரி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திரு உருவப் படத்திற்கு கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, கல்லூரி முதல்வா் சி.ருக்மணி, செயலா் எம்.ரமணன் மற்றும் பேராசிரியைகள், மாணவிகள் அஞ்சலி செலுத்தினா்.
மேலும், தெள்ளாரில் உள்ள சுவாமி அபேதானந்தா மடத்தில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
