வந்தவாசியில் 1322 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை செய்யாறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் தலைமையில் ஒன்றிய குழு பெருந்தலைவர் டாக்டர் ஜெயமணி ஆறுமுகம் முன்னிலையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செய்யாறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் கலந்து கொண்டு பேசும்போது: இந்தியாவிலேயே எந்த மாநில முதலமைச்சரும் செய்யாத சாதனையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி கல்வி வளர்ச்சிக்காக 38,000 கோடி ரூபாய் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்து கல்வியில் புரட்சி ஏற்படுத்தி உள்ளார் மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்து மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவை நனவாக்கியவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி யார் என்று பேசினார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான 8 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு 1322 விலையில்லா மிதிவண்டிகளை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே மோகன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் மாவட்ட அவைத்தலைவர் டி.கே.பி. மணி, ஒன்றிய கழக செயலாளர் எம்கேஏ லோகேஷ்வரன் டிவி பச்சையப்பன் அர்ச்சுனன் மாவட்ட துணை செயலாளர் திருப்பனங்காடு டி.பி.துரை,வந்தவாசி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வழூர் சக்கரபாணி, நகர அம்மா பேரவை செயலாளர் மேகநாதன், ஒன்றிய துணை செயலாளர் பந்தல் சேகர், நகர துணை செயலாளர் இளவழகன், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் ஜல்லி குமார் மற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரிய ஆசிரியை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்



